தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி
தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த மத் திய அமைச்சரவை கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, முடி வு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையில் கரு த்து வேறுபாடுகள் எழுந்தபோதும், “சி.பி.ஐ.,யின் இந்த கோரிக்கை, நியாயமானது தான்’ என, மத்திய அமைச்சர வை, ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு மத் திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறியதா வது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.ஐ., க்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை எடு த்த முடிவு பற்றி, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இருந்தாலும், வழக்கு பற்றிய தகவல்களை மற்றவர் களுக்கு கொடுப்பதால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பது, எங்களின் கோரிக்கை. சி.பி.ஐ.,யை பொறுத்தவரை, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, அது தொடர்பான தன் கருத்தை விளக்கி, இயக்குனருக்கு அறிக்கை அளிப்பார். சி.பி.ஐ., வழ க்குகளில், இது முக்கியமான ஆதாரமாக கருதப்படுகி றது. இந்த தகவல்கள் பகிரங்கபடுத்தப்பட்டால், விசாரணை க்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற் படும். இதன் காரணமாகவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி லிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்துகிறோம். இவ் வாறு தாரிணி கூறினார். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடி வு, சி.பி.ஐ.,யால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் வெளிப்படை யான தன்மை குறித்து, கேள்வியை எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment